தாய்வான் வங்கிக் கொள்ளை விசாரணை! மைத்திரியின் தேர்தல் வெற்றியைக் கேள்விக்குள்ளாகியுள்ளது!

தாய்வான் வங்கியொன்றின் இணையக் கட்டமைப்பை ஊடறுத்து மேற்கொள்ளப்பட்ட 600 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்ளை இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வங்கியில் கொள்ளையிடப்பட்ட பெருந்தொகை பணம் இலங்கையிலுள்ள வங்கிக் கணக்குகள் சிலவற்றிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் என்.எம்.எஸ். முணசிங்க உள்ளிட்ட சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள என்.எம்.எஸ். முணசிங்க புதிய ஜனநாயக முன்னணி (அன்னப்பறவைச் சின்னம்) கட்சியின் தலைவராவார்.

இந்தக் கட்சியிலேயே தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார்.

அத்துடன், இவர் பிரித்தானிய குடியுரிமையைப் பெற்றுள்ளார் என்று தற்போது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், வெளிநாட்டுக் குடியுரிமையைக் கொண்ட ஒருவர் இலங்கையில் எவ்வாறு அரசியல் கட்சியின் தலைவராக இருக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அத்துடன், இந்தக் கட்சியில் போட்டியிட்டு ஜனாதிபதி பதவியில் உள்ள மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதித் தேர்தல் வெற்றியையும் பொது எதிர்க்கட்சியினர் கேள்விக்குறியாக்கியுள்ளனர்.

எனினும், இந்த சிக்கலான விவகாரம் இலங்கை தேர்தல் சட்டத்திற்கமைய எவ்வாறான பின்னணியைக் கொண்டிருக்கிறது என்ற விபரங்கள் முழுமையாக கிடைக்கவில்லை.

இந்த விடயம் குறித்து இனிவரும் காலங்களில் விரிவாக ஆராய்ந்து வெளியிட எதிர்பார்த்துள்ளோம்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top