மழை தொடர்கிறது - பல இடங்களில் வெள்ள அபாயம் - மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனனா காலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கடல் பிரதேசங்களில் வேகமாக காற்றை எதிர்பார்கலாம் எனவும், மேற்கு, சப்ரகமுவ, வடமேல், வடக்கு போன்ற மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 தொடக்கம் 150 மில்லி மீற்றர் மழை பெய்யுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, காலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, குருவிட்ட எஹெலியகொட ஆகிய பிரதேசங்களுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top