நாய் இழுத்துச் சென்ற சிசுவின் சடலம் -  நுவரெலியாவில் அதிர்ச்சியும் அவலமும்

- டி.சந்ரு

பிறந்த சிசுவொன்றின் சடலத்தை நாய் ஒன்று இழுத்துச் சென்ற சம்பவம் நுவரெலியா நகரில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா சினிசிட்டா மைதானத்திற்கு அருகாமையில் உள்ள கட்டடத்தொகுதியொன்றுக்கு பின்புறமாக இருந்த புற்புதருக்குள் நாய் ஒன்று சிசுவின் உடலத்தை இழுத்துச் சென்றுள்ளது. இதனை நானுஓயா பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியொருவர் அவதானித்துள்ளார். அவர் உடனடியாக நுவரெலியா பொலிசாருக்கு அறிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் இதுகுறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எனினும், இந்தச் சிசு எப்போது பிறந்தது, யார் இதனை விட்டுச் சென்றுள்ளர் உள்ளிட்ட விபரங்களை பொலிசார் இன்னமும் கண்டறியவில்லை. குறித்த முச்சக்கர வண்டி இந்த படங்களை எமது செய்தியாளருக்கு அனுப்பிவைத்துள்ளார். இன்று முற்பகல் மீட்கப்பட்ட இந்த சிசுவின் உடலம் குறித்து பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிறந்து தொப்புள்கொடிகூட அறுக்கப்படாது இந்த சிசு வீசி எறியப்பட்டுள்ளதும், இதனை நாய் இழுத்துச் சென்ற சம்பவமும் அந்தப் பிரதேசத்தைச் சூழவுள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- நன்றி மலையக குருவி

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top