மகிந்தவின் சோதிடரை திட்டித்தீர்த்த நாமல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சோதிடர் சுமணதாசவை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடந்த வாரம் திட்டித்தீர்த்ததாக தெரியவருகிறது.

முன்னாள் ஜனாதிபதி ஆட்சியை இழக்க காரணமாக இருந்தவர் எனக் கூறப்படும் பிரபல சோதிடர் சுமணதாச, அண்மையில் ஊடகங்களுக்கு அண்மையில் எதிர்கூரலொன்றை முன்வைத்திருந்தார். ராஜபக்ஷ குடும்பத்தில் அரசியல் ஆதிக்கம் செலுத்தப்போவது இதுவரை அரசியலில் முகம்காட்டாத ஒரு நபர் எனவும், அவர் தற்போது அதற்கான முன்முயற்சிகளை செய்துவருவதாகவும் கூறியிருந்தார்.

இந்த ஊடகச் செய்தியைப் பார்த்துவிட்டு தொலைபேசியில் அழைத்துப்பேசிய நாமல் ராஜபக்ச, '' ஆ சுமணதாச, நீர் எம்மை கஸ்டத்தில் போட்டுவிட்டீர். மீண்டும் ஒருமுறை வேட்டு வைக்கவா முயற்சிக்கிறீர்? கோதாபயவை ஊதிப் பெரிப்பிக்க முயற்சிக்கிறீரா? உன்னை நான் நான் என்ன செய்வேன் என்று தெரியாது எனக்கு'' என்று திட்டித்தீர்த்துள்ளார்.

வயதில் மூத்தவர் என்பதைக்கூட மதிக்காது நாமல் திட்டியதைக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு பதிலளித்த சோதிடர் சுமணதாச, ''அதிகம் கத்தவேண்டாம் நாமல் பேபி. உங்களின் ஒரு ஃபிலின் சில தகவல்கள் என்னிடம் இருக்கின்றன'' என்று கூறியுள்ளார். இதன்பின்னர் நாமல் ராஜபக்ச எதுவும் கூறாமல் அழைப்பைத் துண்டித்துள்ளார் என சோதிடருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவித்தன.

மகிந்த ஆட்சிக் காலத்தில் இந்த சோதிடரின் ஆலோசனையைக் கேட்டே மகிந்த ராஜபக்ச அனைத்துப் பணிகளை முன்னெடுத்திருந்தார். ஜனாதிபதி ஆட்சிக்காலம் முடிய முன்னரே தேர்தலை நடத்துமாறு சோதிடர் சுமணதாசவே ஆலோசனை வழங்கியிருந்தார் எனக் கூறப்படுகிறது. இதன்படி தேர்தல் நடத்தியே மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததாகவும் இவர் மீது மகிந்த குடும்பத்தில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

இந்தச் சம்பவத்தின் சில தினங்களின் பின்னர் அம்பாந்தோட்டையில் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய குற்றச்சாட்டில் நாமல் ராஜபக்ச கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top