ஏறாவூரில் தாயும் (26), மகனும் (11) அடித்துக் கொலை

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருகன் கோவில் வீதி, சவுக்கடி, தன்னாமுனையை சேர்ந்த மதுவந்தி என்ற 26 வயது தாயும், மதுஷன் என்ற 11 வயது மகனும் படுக்கையறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இப்பெண்ணின் கணவர் கணபதிப்பிள்ளை பீதாம்பரம் மத்தியகிழக்கு நாடொன்றில் கடந்த எட்டு வருடமாக பணியாற்றி வருவதாகவும், வரும் டிசம்பர் மாதம் அவர் நாடு திரும்பவிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடவிருந்த இவர்கள் இரவு உறங்கிக்கொண்டிருந்தபோது, கூரை ஓட்டைப் பிரித்து கயிற்றைக்கட்டி வீட்டுக்குள் இறங்கியவர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இப்பெண் நேற்று பிற்பகல் தனது சகோதரியின் நகையொன்றை செங்கலடி நகைக் கடையொன்றில் அடகு வைத்து ரூ.60,000 பணத்தை பெற்று வந்தார் எனக் கூறப்படுகிறது.

இன்று காலை 9 மணியளவில் இவரது வீட்டு வளவில் மாடு மேய்வதைக் கண்ட அருகாமையில் வசிக்கும் சகோதரியின் மகள், மாட்டை துரத்திவிட்டு, திறந்திருந்த வீட்டினுல் சென்று சித்தியை அழைத்த போதுதான் சித்தியும், சித்தியின் ஒரேயொரு மகனும் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அலறியடித்து ஓடி வந்துள்ளார்.

இப்படுகொலை பற்றி கிராமே சேவை அலுவலருக்கும், ஏறாவூர் பொலிசாருக்கும் அறிவிக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

சில வருடங்களுக்கு முன்னர் ஏறாவூர் நகரில் தாயும், மகளும் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

EravurMurder2

 EravurMurder3

EravurMurder4

EravurMurder5

 

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top