நுவரெலியாவில் 4 புதிய பிரதேச சபைகள்

உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்தின் கீழ், நுவரெலியாவில் நான்கு புதிய பிரதேச சபைகளை நிறுவ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கேற்ப அம்பகமுவ பிரதேச சபைகள் மூன்றாக பிரிக்கப்பட்டு அம்பகமுவ, நோர்வூட், மஸ்கெலியா எனும் பிரதேசசபைகளாக செயற்படவுள்ளன.

நுவரெலியா பிரதேச சபை மூன்றாக பிரிக்கப்பட்டு கொட்டகலை, அக்கரப்பத்தனை, நுவரெலியா எனும் பிரதேச சபைகளாக செயற்படவுள்ளன.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்வரும் வாரம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top