ஊடகங்களைத் தோலுரித்த பிரதமர்

மக்களை பிழையாக வழிநடத்துவதை ஊடகங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற (19) ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

உத்தேச புதிய அரசியலமைப்பு குறித்து மல்வத்து, அஸ்கிரிய சங்க சபைகளின் கருத்துக்களை பீடாதிபதிகளின் கருத்துக்களைப் போல பத்திரிகைகள் இன்று பிரசுரித்துள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இதற்கான ஆதாரங்களையும், வெளிவந்த பத்திரிகைகளையும் பிரதமர் ஊடகங்களுக்கு காண்பித்தார்.

இதற்கு ஊடக பிரதானிகளினால் பதில் கூற முடியுமா என்றும் கேள்வியெழுப்பினார்.

இன்றைய நாளிதழ் செய்தியைப் பார்த்து தான் குழப்பமடைந்ததாகவும், இதுகுறித்து கேட்பதற்கு அஸ்கிரிய பீடாதிபதியை அழைத்தபோது அவர் நாட்டில் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், சங்க சபை உறுப்பினர்களின் கருத்துக்களை பீடாதிபதியின் கருத்துக்களைப் போல பிரசுரித்து நாட்டு மக்களை ஊடகங்கள் தவறாக வழிநடத்தக்கூடாது எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

பீடாதிபதிகள் சார்பாகவோ, எதிராகவோ கருத்து தெரிவித்தால் அவற்றை ஊடகங்கள் பதிவிடுவதில் தவறு இல்லை எனவும், எனினும், இவ்வாறு தவறாக மக்களை வழிநடத்தும் விளையாட்டை ஊடகங்கள் செய்யக்கூடாது எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top