1150 x 80 px

 

ஒரே தினத்தில் 341 மன்றங்களுக்கும் பெப்ரவரி 17இற்கு முன்னர் தேர்தல்!

எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர், வார இறுதி நாள் ஒன்றில் தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

248 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கான வேட்பு கோருவதற்கான அறிவிப்பை தேர்தல் திணைக்களம் இன்று (4) வெளியிட்டுளள்து.

இதன்படி 17 மாநகர சகைளுக்கும், 23 நகர சபைகளுக்கும், 208 பிரதேச சபைகளுக்குமான தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் அந்தந்த தெரிவத்தாட்சி அதிகாரிகள் கோரியுள்ளனர்.

வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 248 மன்றங்களுக்குத் தேர்தல் நடத்துவதற்காக இம்மாதம் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 93 மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன்படி இம்மாதம் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்கப்படும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top