1150 x 80 px

 

யார் சென்றாலும் நான் செல்லேன் : பசிலுக்கு உறுதி வழங்கிய விமல்

தமது கட்சியான தேசிய சுதந்திர முன்னணியில் இருந்து யார் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டாலும், தான் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியைவிட்டுச் செல்லப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு உறுதிவழங்கியுள்ளார்.

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் தேசிய சுதந்திர முன்னணியிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்ளும் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. அந்தக் கட்சியில் இருந்து சுதந்திரக் கட்சியில் இணைந்த வீரகுமார திஸாநாயக்க நாளை அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

இந்த நகர்வுகளைத் தடுக்க முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச பலத்த பிரயத்தனம் மேற்கொண்டிருந்தார்.

எனினும், விமல் வீரவங்ச ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்வதற்கான சாத்தியங்கள் இல்லையெனவும், மகிந்த ராஜபக்ச மீதுள்ள அன்பு இதற்கு காரணமல்ல எனவும் தெரியவருகிறது.

விமல் வீரவங்சவின் இரகசியக் கோப்புக்கள் பசில் ராஜபக்ச வசம் இருப்பதால், கட்சி மாறுவது ஆபத்தானது என்பதை விமல் வீரவங்ச நன்கு அறிந்துள்ளமையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

கட்சி தாவிய பின்னர் பசில் ராஜபக்ச வாய் திறக்கும் பட்சத்தில் தனது இரகசியங்கள் அனைத்தும் வெளிவரும் என்பதால் தனது கட்சியில் இருந்து எவர் சென்றாலும், தான் ஒருபோதும் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியில் இருந்து விலகிச் செல்லப் போவதில்லை என விமல் வீரவங்ச, பசில் ராஜபக்சவிற்கு உறுதிவழங்கியுள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top