1150 x 80 px

 

பயங்கரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்க விசேட திட்டம்

சர்வதேச பயங்கரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவுவதைத் தடுக்க விசேட பாதுகாப்புப் பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இன்டர்பொல் என்றழைக்கப்படும் சர்வதேச பொலிசார், இலங்கை சட்டம், ஒழுங்கு, குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுடன் இணைந்து இந்த விசேட பொறிமுறையை ஏற்படுத்தியுளு;ளனர்.

24 மணி நேரமும் இயங்கும் சர்வதேச பொலிசாரின் தகவல் பரிமாற்றுப் பிரிவும் இந்தப் பொறிமுறைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பொலிசாரினால் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களும் இதனூடாக பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பு கிட்டியுள்ளது..

இதன்படி சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட ஒருவர் இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சித்தால், அவருக்கு எதிராக இலங்கைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு இருப்பதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய நிலையில், இலங்கைக்கு பயங்கரவாத அச்சுத்தல் இல்லை என்ற போதிலும், ஆசியாவிற்கும், வலய நாடுகளில் சிலவற்றிற்கும் இந்த அச்சுறுத்தல் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பொறிமுறையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top