1150 x 80 px

 

க.பொ.த பரீட்சையில் இனி ஆறு பாடங்கள்

இனிவரும் காலங்களில், கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் பாடங்களாகக் குறைத்து, தகவல் தொழில்நுட்பத்தினை கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையிலுள்ள ஒன்பது பாடங்களை, பல மாற்றங்களுடன் ஆறு பாடங்களாகக் குறைத்தே, தகவல் தொழில்நுட்பத்தினை கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்

உலகின் வெற்றிகரமான கல்வி முறை பின்லாந்து நாட்டில் காணப்படுவதாகவும், நடைமுறை மற்றும் தொழிற்துறை கல்வியே அங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பின்லாந்து நாட்டைப் போல, குறித்த நடைமுறைக்கு முன்னுரிமை கொடுத்து மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ள கல்வித்திட்டம் மூலம், நாட்டின் மாணவர்களது எதிர்காலத்தைச் சிறந்த முறையில் வலுப்படுத்த முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top