1150 x 80 px

 

மாணவருக்கு சுரக்‌ஷா இலவச காப்புறுதித் திட்டம் அறிமுகம்

இலங்கை மாணவச் செல்வங்களின் நலனை கருத்திற்கொண்டு கல்வி அமைச்சினால் இலவசமாக வழங்கப்படும் வைத்திய மற்றும் தனியாள் காப்புறுதி திட்டத்தின் தேசிய நிகழ்வு நேற்று (07.12.2017) கொழும்பு அனுலா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்தக் காப்புறுதித் திட்டத்திற்காக கல்வி அமைச்சு சுமார் 5 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி பாடசாலை மாணவருக்குத் தலா இரண்டு லட்சம் ரூபா வருடாந்தம் காப்புறுதித் தொகையாக ஒதுக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் பகுதியளவில் நிவாரணத்தைப் பெறும், பெறாத தனியார் பாடசாலைகள், சர்வதேச பாடசாலைகள் உள்ளிட்ட இலங்கையிலுள்ள 11,242 பாடசாலைகளில் கல்வி பயிலும் சுமார் 45 லட்சம் மாணவருக்கு இந்த காப்புறுதித் திட்டம் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்படி சாதாரண சிகிச்சைக்காக வருடாந்தம் 10 ஆயிரும் ரூபாவும், வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும் பட்சத்தில் 10 ஆயிரம் ரூபாவும் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழக்க நேரிடும் பட்சத்தில் ஒரு லட்சம் ரூபாவும் பிள்ளையின் தாய் அல்லது தந்தைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், பிள்ளை உயிரிழக்கும் பட்சத்தில் 75 ஆயிரம் ரூபா நட்டஈடு வழங்கவும் ஊனமுற்றால் 50 ஆயிரும் ரூபா முதல் ஒரு லட்சம் ரூபா வரையும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும், ஆரோக்கியமான, பாதுகாப்பான சமூகத்தைக் கட்டியெழுப்பவே அரசாங்கம் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை லங்கா நியூஸ் வெப் இணையத்தளம் முன்வைக்கிறது. காப்புறுதித் திட்டம் அவசியம் என்ற போதிலும், சிறுவரின் பாதுகாப்பிற்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் அதிக அக்கறையும், நிதியும் செலவிடப் பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top