1150 x 80 px

 

குற்றத்தை ஒப்புக்கொண்ட சஜின் வாஸ் : ஆயிரம் ரூபா அபராதம் விதித்த நீதிமன்றம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவிற்கு கொழும்பு பிரதான நீதவான் 1000 (ஆயிரம்) ரூபா அபராதம் விதித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தபோது தனது சொத்து விபரங்களை வெளியிடாமைக்காக இந்த இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சஜின் வாஸ் குணவர்தன 2011ஆம் 2012ஆம் ஆண்டுகளில் தமது சொத்து விபரங்களை வெளியிடவில்லை எனக் கூறி, லஞ்ச, ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, தனது குற்றத்தை சஜின்வாஸ் குணவர்தன ஒப்புக்கொண்டார். இதன்பின்னரே நீதிமன்றம் குறித்த அபராதத் தொகையை விதித்துள்ளது.

இதுகுறித்து நியூஸ்பெஸ்ட் செய்திப் பிரிவு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதையும், அதற்கு வாசகர் ஒருவர் அளித்துள்ள பதிலையும் கீழே காணலாம்.

(வாசகரின் பதிலின் மொழிபெயர்ப்பு : அடக்கடவுளே இந்த மனிதர் எவ்வாறு இந்த அபராதத் தொகையை செலுத்தப் போகிறாரோ தெரியவில்லை)

சஜின் வாஸ் குணவர்தன மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் பெருமளவிலான ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட நபராவார். இவர் மகிந்த ராஜபக்சவின் பிரத்தியேக இணைப்பாளராகவும் பணியாற்றியிருந்தார் என்பது நினைவூட்டத்தக்கது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top