1150 x 80 px

 

ரயில் போக்குவரத்து அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார். ஜனாதிபதி செயலாளர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பல கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி 12 புகையிரத தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் தபால் சேவை ஸ்தம்பிதம் அடைந்ததுடன், பயணிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவிற்கும் ரயில் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.

இதனால் ரயில் சாரதிகள் சங்கம் உள்ளிட்ட புகையிரத தொழிற்சங்கங்களால் நடத்தப்பட்டுவரும் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெப்பதாக அறிவித்துள்ளன.

இதனால் ரயில் சேவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் பெரும் அசௌரிகயங்களை எதிர்கொண்டுள்ளனர்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top