1150 x 80 px

 

இனவாதிகளே பொருத்தமற்ற இடங்களில் போதி தேவனை நடுகை செய்கிறார்கள்

இனவாதிகளே வடக்கு கிழக்கில் பொருத்தமற்ற இடங்களில் போதி தேவனை நடுகை செய்கிறார்கள் என ஈ.பி.டி.பி செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (8) நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து உரையாற்றிய டகள்ஸ் தேவானந்தா,

இனங்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்பட வேண்டும் என்ற உண்மையான – பரிசுத்தமான எண்ணங்கள் இருக்கின்ற பௌத்த தேரர்கள் பௌத்த மக்கள் இந்த நாட்டில் நிறையவே இருக்கின்றனர்.

இத்தகைய நிலையில்தான் சில தீய இனவாத சக்திகளால் - குறுகிய சுயலாப நோக்குடைய அரசியல்வாதிகளால் தூண்டப்படுகின்ற சில கைக்கூலிகள் பௌத்த மக்கள் இல்லாத வடக்கு – கிழக்கு உட்பட்ட பகுதிகளில் இரவோடிரவாக புத்த பெருமானின் சிலைகளைக் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்று விடுகின்றன.

இது புத்த பெருமானையும் பௌத்த மதத்தையும் அவமதிக்கும் செயலாகவே நான் காணுகின்றேன்.

குறித்த செயல்கள் தொடர்பில் விமர்சனங்கள் எழுகின்றபோது 'இந்த பௌத்த நாட்டில் வடக்கு – கிழக்கில் பௌத்த விஹாரைகள் அமைப்பதற்கு தமிழர்கள் - முஸ்லிம்கள் தடை' என அதே இனவாத சக்திகள் பிரச்சாரம் மேற்கொள்கின்றன.

இது தவறான விடயம். இத்தகைய குழப்பங்களை ஏற்படுத்துவதற்காகவே இந்த தீய சக்திகள் புத்த பெருமானின் சிலைகளைக் கொண்டு வந்து வைத்து விடுகின்றன என்பதுதான் உண்மையான விடயம். இவ்வாறு ஒரு மதத்தை மலினமாக்கக் கூடாது.

ஒரு மதத்தின்மீது ஏனைய மதத்தினருக்கும் மதிப்பு ஏற்படுகின்ற வகையிலான செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட வேண்டும்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top