1150 x 80 px

 

ரயில் சேவைக்கு சமூக-மளிக்காதோர் சேவையை விட்டு விலகியவர்களாகக் கருதப்படுவர்

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதால், சேவைக்கு சமூகமளிக்காத ஊழியர்களை சேவையை விட்டு விலகியவர்களாகக் கருத நேரிடும் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

ரயில் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு வரும் வரை, தனியார் பேருந்து போக்குவரத்து அனுமதிப் பத்திரமின்றி அதிவேக வீதியில் சேவையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top