1150 x 80 px

 

பிணை முறி நட்டத்தை ஈடுசெய்ய மெண்டிஸ் நிறுவனத்தைப் பொறுப்பேற்க முயற்சி

பிணை முறி மோசடியில் அரசாங்கத்திற்கு இழைக்கப்பட்ட நட்டத்தை ஈடுசெய்வதற்காக அர்ஜூன் அலொசியத்திற்குச் சொந்தமான மெண்டிஸ் நிறுவனத்தை பறிமுதல் செய்வது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரியவருகிறது.

பேப்பெர்ச்சுவெல் ட்ரசரிஸ் நிறுவனத்தினால் ஈட்டப்பட்டதாக கருதப்படும் 11,145 பில்லியன் ரூபாய்களை மீண்டும் வசூலிக்கக்கூடியதாக இருக்கும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரவாமி தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி முறிகள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பேப்பெர்ச்சுவெல் ட்ரசரிசின் கணக்குகளை மத்திய வங்கி நிறுத்தியது.

அத்துடன், அந்த நிறுவனத்தினால் பணம் எதனையும் மீளப்பெறுவதையும் தடை செய்ததாக இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சட்டமா அதிபர் திணைக்களம், சிவில் மீளப்பெறல் வழக்கை தாக்கல் செய்து அந்த பணத்தை மீண்டும் பெறமுடியும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top