1150 x 80 px

 

பிணை முறி விசாரணை அறிக்கையின் மூலம் ஐ.தே.க வாக்குகளை பிரிக்க முடியாது : ரவி

பொய்யான குற்றச்சாட்டுக்களின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளை சிதறடிக்கவோ, குறைக்கவோ முடியாது என முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிணை முறி விசாரணை அறிக்கையின் மூலப் பிரதியொன்றை வழங்குமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு நேற்று (8) சென்றபோது, ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ரவி கருணாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
''எமது பெயரை, ஏதோ ஒரு விதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இதில் எந்தவொரு நியாயமும் இல்லை என்றே நாம் கூறுகிறோம். ஐக்கிய தேசியக் கட்சி, எமது தலைவர் உள்ளிட்ட எங்களை இலக்குவைத்தே இதனைச் செய்துள்ளனர். இது அநீதியானது. இதன் மூலப்பிரதி கிடைத்தபின்னர் இதுகுறித்து எமக்கு செயல்பட முடியும். இதன் மூலப் பிரதியை உடனடியாக சமர்ப்பிக்குமாறு நாம் கோருகிறோம். ஹெஜின் சூதாட்டத்தில் 76,000 மில்லியன் ரூபா இருக்கிறது. கீரிக் பொண்டில் 7600 மில்லியன் ரூபா இருக்கிறது. ஶ்ரீலங்கன் கொடுக்கல் வாங்கலில் 146,000 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. உமா ஓயா குறித்து பிரச்சினை இருக்கிறது. இவற்றைத் தவிர பெருந்தொகை கடனை ஏற்படுத்தியுள்ளனர். இவற்றில் எதுவும் பகிரங்கப்படுத்தப்படாமல் இந்த ஒன்றை மட்டும் பகிரங்கப்படுத்துவது மிகவும் அநீதியானதாகும். எனினும், விசாரணைகளை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம். விசாரணைகளுக்கு நாம் அஞ்சவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம். மிகவும் சிரமபப்பட்டு இந்த அரசாங்கத்தை உருவாக்கினோம். எனினும், எம்மை இலக்கு வைக்கின்றனர். எனினும், இது ஐக்கிய தேசியக் கட்சியை இலக்குவைத்து தேர்தல் காலத்தில் இவ்வாறு செய்வது அநீதியானது. ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், இந்த முனைப்புக்களின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆரவாளர்களின் வாக்குகளைப் பிரிக்கவோ, குறைக்கவோ முடியாது. வாக்குகள் அதிகரிக்குமே அன்றி குறையாது. உங்களின் உள்கட்சிக்குள் இருக்கும் பிரச்சினையை ஐக்கிய தேசியக் கட்சியை வைத்துத் தீர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டாம்'' என்று ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top