1150 x 80 px

 

இரத்த கையிருப்பு குறைந்துள்ளது : இரத்த தானம் செய்யுங்கள்

டெங்கு உள்ளிட்ட வேறு பல நோய்கள் காரணமாக வருடா வருடம் காப்பகத்தில் உள்ள இரத்தத்தின் அளவு குறைந்து வருவதாகவும், எனவே பொதுமக்கள் முன்வைத்து இரத்த தானம் செய்ய வேண்டும் எனவும் தேசிய இரத்த பரிமாற்று மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வருடாந்தம் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையில் இரத்த பரிமாற்றம் குறைவதாகவும், இதனால் விரைவாக இரத்த தானம் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இரத்த பரிமாற்று மத்திய நிலையத்தின் பணிப்பாளர் டொக்டர் ருஷான் பெல்லன தெரிவித்தார்.

கொழும்பு நாரேஹேன்பிட்டி இரத்த பரிமாற்று மத்திய நிலையத்திற்கு அல்லது அருகில் உள்ள மருத்துவமனைக்கு வந்து இரத்த தானம் செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்த மேலதிக தகவல்களை 0777 586 596 பெற்றுக்கொள்ள முடியும் என அறிவித்துள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top