1150 x 80 px

 

பாரிய குற்றச் செயல் சம்பவங்களில் ஜீ.எல்.பீரிஸ் கட்சிக்காருக்கே அதிக தொடர்பு

பாரிய குற்றச் செயல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, குறித்த 34 சம்பவங்களில் 32 சம்பவங்களுடன் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியின் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் கட்சிக் காரர்கள் தொடர்புபட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஹாலி-எல பட்டிபொல பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி, அலி பாபா நாற்பது திருடர் என்ற கதையாகியுள்ளதால் அவர்களுக்கும் மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என அமைச்சர் தெரிவித்தார். எனவே எஞ்சியிருப்பது திருடர்களைப் பிடிப்பதற்காக ஆணைக்குழுவை அமைத்து, விசாரணைகளை நடத்தி, திருடர்களுக்கு தண்டனை வழங்க உத்தரவிட்டுள்ள ஜனாதிபதி தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டமைப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிணைமறி மோசடியில் கையாளப்பட்ட பணம் சாதாரண குடிமகனுடையது என்றும், தினமும் கஷ்டப்பட்டு வேலை செய்யும் இந்த நாட்டுப் பிரஜைகளின் சேமலாப நிதியாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஆகவே இவ்வாறு சாதாரண மனிதர்களிடம் இருந்து பணத்தை திருடி தனது பையை நிரப்பியவர்களை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறவும் தாம் தயாராக இருப்பதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

அதனை அவர், கொழும்பில் இன்று (9) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

“முன்னாள் அமைச்சர் ஒருவர் பொய் சாட்சியம் வழங்கியுள்ளார்” என்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆணைக்குழுவில் பொய் சொன்ன ஒருவருக்கு மக்களிடம் பொய் கூறுவது பெரிய விடயம் அல்ல.

ஐக்கிய தேசியக் கட்சியின் மிகுதியாக உள்ள பெயரை சரி பாதுகாப்பதற்கு சஜித் பிரேமதாச போன்றோர் முயற்சிக்க வேண்டும். ஐக்கியமும் இல்லை தேசியமும் இல்லை.தற்போது உள்ள கட்சியையாவது பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் நடைபெற்ற பிணை முறி மோசடியில் மத்திய வங்கியின் ஆளுநர் என்ற அடிப்படையிலேயே அர்ஜூன் மகேந்திரன் தொடர்புபட்டுள்ளார். ஆகவே அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top