1150 x 80 px

 

சட்டவிரோத அகதிகளிடம் லஞ்சம் பெற்ற குடிவரவு அதிகாரிகள் மூவர் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குச் சென்ற இலங்கையர் சிலரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவித்த குற்றச்சாட்டின் கீழ் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குச் சென்ற இந்த இலங்கையர், அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இவர்களை, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக, அவர்களிடம் தலா 200 டொலர்களை லஞ்சமாகப் பெற்று குறித்த குடிவரவு அதிகாரிகள் இவர்களை எவ்வித விசாரணைகளும் இன்றி நாட்டிற்குள் வர அனுமதித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மூன்று அதிகாரிகளுக்கும் எதிராக லஞ்சம் பெற்றமை, சட்டவிரோத பயணிகளை விடுவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top