1150 x 80 px

 

கொலைகளை வைத்து ஐ.தே.க. பிழைப்பு நடத்தியது : அசாத் சாலி

கடந்த அரசாங்கக் காலத்தில் நடந்த கொலைகளுடன் சம்பந்தப்பட்ட ஒருவரையேனும் கைதுசெய்ய ரணில் விக்ரமசிங்கவினால் முடியாது போயுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மேயர் வேட்பாளர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (09) கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

லசந்த, தாஜூன் கொலைகளுக்கு எதிராக குரல் எழுப்பி கடந்த அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி பாரிய பிரசாரங்களைச் செய்து ஆட்சியைக் கைப்பற்றியதாகவும், எனினும், தற்போது அந்தக் கொலைகளுடன் தொடர்புடைய எந்தவொரு நபரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை எனவும் அசாத் சாலி மேலும் தெரிவித்துள்ளார்.

2013ஆம் ஆண்டில், லசந்தவின் நினைவு தினத்தில் கலந்துகொண்ட ரணில் விக்ரமசிங்க அப்போதைய அரசாங்கத்தை வலியுறுத்தினார். ஆனால் இன்று அவரது அரசாங்கம் எதனையும் செய்யவில்லை என்றும் அசாத் சாலி குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்து கருத்துரைத்த அசாத் சாலி,

''2009ஆம் ஆண்டு லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்கின்றனர். இந்தக் கொலையை மையமாகக் கொண்டே ஐக்கிய தேசியக் கட்சி தனது செயல்பாடுகளை முன்னெடுத்தது. தாஜூதீன் கொலை செய்யப்பட்ட போதும், ஐக்கிய தேசியக் கட்சி இதுகுறித்து தேடுவதாகவும், ஆவணங்களை சேகரிப்பதாகவும் தேர்தல் காலங்களில் வியாபாரமாக்கியது. எனினும், ஒருவரையேனும் கைதுசெய்ய முடிந்ததா? 2013ஆம் ஆண்டில், லசந்தவின் நினைவு தினத்தில் கலந்துகொண்ட ரணில் விக்ரமசிங்க அப்போதைய அரசாங்கத்தை வலியுறுத்தினார். லந்தவின் கொலை வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் எனக் கோரினார். அவர் சுட்டுக் கொல்லப்படவில்லை, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தனர். லசந்த கொலையாளிகள் எத்தனை மோட்டார் சைக்கிளில் சென்றனர்? இந்த மோட்டார் சைக்கிள்கள் யாருக்குச் சொந்தமானவை? இவற்றுக்கு ஒரேயொரு சாட்சி இருந்தார். அந்த நபரையும் வெலிகடை சிறையில் வைத்து கொன்றனர். இவற்றை யார் செய்தது என்பதை முழு நாடும் அறியும். ஆனால் ஒருவரையேனும் கைதுசெய்ய ரணில் விக்ரமசிங்கவினால் முடியாமல் போனது.'' என்று அவர் குறிப்பிட்டார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top