1150 x 80 px

 

கெரில்லா போராளியின் காதலையும் போராட்டத்தையும் பேசும் பல்பசா கபே

பல்பசா கபே என்ற நேபாள மொழியில் வெளிவந்த நூல் சிங்கள மொழியில் வெளியீடு காண்கிறது.

நாராயன் வாங்கேல என்ற பிரபல எழுத்தாளர் நேபாள மொழியில் எழுதிய இந்த நூலை சிரேஸ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார். லங்கா நியூஸ் இணையத்தளத்தின் அனுசரணையில் இந்த நூல் வெளியிடப்படுகிறது.

நேபாளத்தில் கெரில்லா போராளிகளில் ஒருவரது காதல் கதையையும், போராட்டத்தையும் இந்த நூல் பேசுகிறது.

நேபாள மொழியில் உள்ள நூல் ஒன்று சிங்கள மொழியில் வெளிவருகின்றமை இதுவே முதன்முறையாகும்.

பல்பசா கபே நூல் வெளியீட்டு விழா 11.01.2018ஆம் திகதி மாலை 3.30 இற்கு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறுகிறது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top