1150 x 80 px

 

பிணைமுறி குறித்த உண்மையை மக்கள் அறிவர் : சுசில்

விரிவாக ஆராயப்பட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ள விடயங்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என குற்றஞ்சாட்ட நபர் கூறுவாரேயானால், அது குறிப்பிட்ட நபரின் தனிப்பட்ட பிரச்சினை என அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போது பொதுமக்கள் இதுகுறித்த உண்மையை அறிந்த்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிணை முறி மோசடி குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை குறித்து முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வெளியிட்ட கருத்துக்கள் குறித்து கேள்வியெழுப்பப்பட்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (9) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துரைத்த அமைச்சர்,
''ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை வாசிக்காது சிலர் கருத்து கூறுகின்றனர். இதனை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு ஊடகங்களில் கருத்து வெளியிடுகின்றனர். எனினும், இவர்கள் ஆணைக்குழுவின் முன் எவ்வாறு சாட்சியளிக்கச் சென்றனர் என்பதை நாட்டு மக்கள் பார்த்தனர். இந்த சாட்சிகளுக்கமையேவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் நான்கு சுவர்களுக்கு இடையே பகிரப்படும் சாட்சியங்களுக்கு அமையவே, அதனை ஆராய்ந்து நீதிபதி தீர்மானம் எடுக்கிறார். அவ்வாறு இன்றி வீதியில், பத்திரிகையைப் பார்த்து, அதிலுள்ள தகவல்களுக்கமைய நீதிபதி தீர்மானம் எடுக்கமாட்டார். எனவே, நீதிமன்றத்துறையில் மிகவும் உயர் பதவிகளை வகித்தவரே இந்த ஆணைக்குழுவிற்கு தலைமை தாங்கினார். இவரின் தலைமையிலான அறிக்கையே தற்போது வெளிவந்துள்ளது. வாக்குமூலத்தின் போது அதிநவீன தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மிகவும் நுட்பமாக ஆராய்ந்து இந்த அறிக்கையை இவர்கள் தயாரித்துள்ளனர். இதனை நாம் பாராட்டுகிறோம். இவ்வாறு ஆராய்ந்து வெளியிடப்பட்ட, நாட்டு மக்கள் பார்த்த, நாளாந்தம் கேட்ட விடயங்களை யாராவது ஒருநபர், இதில் உள்ளவற்றை நம்பமுடியாது எனக் கூறுவாரே ஆனால், இது அந்த நபரின் தனிப்பட்ட ரீதியில் உள்ள பிரச்சினையாக இருக்க முடியும். எனினும், பெரும்பான்மையான மக்கள் இதற்கான தீர்மானத்தை எடுப்பர், சில நேரம் இதுகுறித்து தற்போது தீர்மானித்திருப்பர்.'' என்று அமைச்சர் தெரிவித்தார்.

பிணை முறி மோசடிக்கு முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவும் பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

எனினும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் நம்பிக்கைக் கொள்ள முடியாது என முன்னாள் நிதியமைச்சர் ஊடகங்கள் முன்னிலையில் அண்மையில் தெரிவித்திருந்தார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top