1150 x 80 px

 

ஶ்ரீலங்கன் விமான சேவையின் வேலைத் திட்டம் தோல்வி

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் ஏராளமான வேலைத் திட்டங்கள் தோல்வியடையக் காரணம் அந்த நிறுவனத்தின் பொறியியலாளர் திணைக்களம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன் தலைவரினால் முன்னெடுக்கப்பட்ட தோல்வி வேலைத் திட்டங்களினால் ஏற்பட்டுள்ள நட்டம் மறைத்துக் கொள்வதற்காக தேர்தல் சட்டங்களை மீறி, நிறுவனத்தின் முகாமைத்துவக் கட்டமைப்பில் அதிகாரிகளுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஶ்ரீலங்கன் பிரதான நிறைவேற்று அதிகாரியின் ஆசீர்வாதத்துடன் எந்தவொரு பரிந்துரையும் இன்றி, பழிவாங்கும் நோக்கும் முன்னெடுக்கப்படும் இந்த இடமாற்றங்களினால் ஊழியர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட தோல்வி வேலைத் திட்டம்

இலங்கைக்கு புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட எயார்பஸ் 330-300 விமானத்தை பாகிஸ்தான் விமான சேவைக்கு வழங்கி, இதன் இறுதி கொடுப்பனவை பாகிஸ்தான் நிறுவனம் செலுத்தத் தவறியதால், 75 மில்லியன் ரூபா நடடம் ஏற்பட்டுள்ளது.

EASA தரச் சான்றிதழ் இழக்கப்பட்டதால், அந்த அங்கீகாரத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்காக 400 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

18 வருடகாலம் பழைமையான 03 விமானங்களின் சேவைக் காலத்தை நீடித்தமையினால் 150 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. 4R-ALD என்ற விமானத்தை மூன்று மாதங்களுக்கு மேல் சேவையில் ஈடுபடுத்தியமையினால் இதனைப் பராமரிப்பதற்காக நாளாந்தம் 35,000 டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு உலகில் எந்தவொரு நிறுவனமும் மேற்கொள்ளாத தோல்வி வேலைத் திட்டங்களை ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் முன்னெடுத்துள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top