1150 x 80 px

 

தொழில் தரவில்லை எனில் தேர்தலைப் புறக்கணிப்போம் : பார்வையற்ற பட்டதாரிகள்

அரசாங்க வேலைகளை வழங்கும் போது பார்வையற்ற பட்டதாரிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனில் வாக்களிக்கப் போவதில்லை என வேலையற்ற பார்வையற்ற பட்டதாரிகள் தெரிவவித்துள்ளனர்.

நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் விசேட தேவைகளுடையோர் இருப்பதாகவும், பார்வையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படாவிடின், எதிர்வரும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் பார்வையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசியலமைப்பின் பிரகாரம் அனைத்துப் பிரஜைகளுக்கும் சமமான உரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்க வேலைகளை வழங்கும்போது இதில் மூன்று வீதம் விசேட தேவையுடையோருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இவை நிறைவேற்றப்படுவதில்லை என விசேட தேவையுடைய பட்டதாரிகள் கூட்டமைப்பின் தலைவர் எவ்.எம். லால் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

கண்டி, ஶ்ரீதலதா மாளிகையில் இன்று (10) மதவழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

விசேட தேவை உடையோருக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்கினாலும், அது வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கு போதுமானதாக இல்லை. எனவே, இதற்குப் பதிலாக விசேட தேவை உடையவர்களுக்குரிய வேலைவாய்ப்பு பங்கிற்கு அமைய அரசாங்க தொழில்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த அரசாங்கத்தைப் போலவே தற்போதைய அரசாங்கமும் விசேட தேவை உடையவர்களைக் கண்டுகொள்ளவில்லை. அவர்களின் உரிமைகளைக் காக்க அரசாங்கம் செயல்படவில்லை. மக்களின் வாக்குகளினால் அவர்கள் அதிகாரத்தைப் பெற்றனர். பொதுமக்களின் வரிப் பணத்திலேயே அரசாங்கம் நடத்தப்படுகிறது. எனவே, எமது உரிமைகளை மறுதலிப்பதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித உரிமையும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

DM 001

DM 002

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top