1150 x 80 px

 

தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் பதவிக்கு சுரேஷ் சுப்ரமணியம் போட்டி

தகுதிக்கு ஏற்ப விளையாட்டுக்கள் பலவற்றைத் தெரிவு செய்து, 2020 ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வென்றெடுத்து நாட்டிற்கு பெருமை சேர்க்கும் பிரதான நோக்குடன் செயல்படுவதாக ஆசிய டெனிஸ் சம்மேளனத்தின் உப தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக வேட்பாளராக களமிறங்குவதாக உத்தியோகபூர்வமாக அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று (09) கொழும்பு டெனிஸ் சம்மேளனத்தில் நடைபெற்றது.

எதிர்காலத்தில் விளையாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தகுதிகளுக்கு ஏற்ப வீர, வீராங்கனைகளைப் பயிற்றுவித்து சிறந்தவொரு விளையாட்டுத் துறையைக் கட்டியெழுப்பவும், அவர்களை சிறப்பாக மிளிரச் செய்யவும் எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஒலிம்பிக் குழுவின் ஊடாக எதிர்காலத்தில் இலங்கைக்கு கௌரவத்தையும், அபிமானத்தையும் பெற்றுக்கொடுக்க முடியும் என்று தான் திடமாக நம்புவதாகவும் சுப்ரமணியம் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
''ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள் மிகவும் ஈடுபாட்டுடன் உள்ளனர். இவர்களை மேலும் ஊக்கப்படுத்தவும், வலுசேர்க்கவும் இலங்கை விளையாட்டுச் சம்மேளனம் வலுபெற்றதாக இருக்க வேண்டும். தரமான, சிறந்த நிலையை அடைவதற்கு சிறந்த ஒத்துழைப்பு அவசியமாகும். இதில் மிக முக்கியமான வருமானமாகும். இலங்கையை சர்வதேச விளையாட்டுத் தளத்தில் மேம்படுத்தவதற்கு எமது விளையாட்டு சம்மேளனங்களை வலுபெறச் செய்ய வேண்டும். இதன்மூலமே அர்ப்பணிப்புடன் பணியாற்ற முடியும்'' என்று குறிப்பிட்டார்.

Suresh Subramaniya

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top