1150 x 80 px

 

தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவருக்கு டெனிஸ் சங்கத்திற்கு பாராட்டு

பதவி விலகும் தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் ஹேமசிறி பெர்னாண்டோவின் சேவையைப் பாராட்டி, இலங்கை டெனிஸ் சங்கம் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

இலங்கை டெனிஸ் சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று (09) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் இந்த பாராட்டு வைபவம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதில் டெனிஸ் சங்கத்தின் பிரதிநிதிகள், விளையாட்டுச் சங்கங்கள் சிலவற்றின் பிரதிநிதிகள் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.

பிரபல விளையாட்டு நிர்வாகியாக தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் பதவியில் 22 வருடங்கள் ஹேமசிறி பெர்னாண்டோ பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top