1150 x 80 px

 

அரசியல் கைதிகளின் வழக்குகளை விசாரித்த விசேட நீதிமன்றம் கலைக்கபடுகிறது

அரசியல் கைதிகளின் வழக்குகளை விசாரிக்க அநுராதபுரத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட நீதிமன்றத்தைக் கலைப்பதற்கு நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பயங்கரவாத செயல்பாடுகளுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் வழக்குகளை விசாரிப்பதற்கு இந்த நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டது.

இதன்படி அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தை எதிர்காலத்தில் வடமத்திய மாகாணத்தின் மேல் நீதிமன்றம் - இலக்கம் இரண்டு எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த விசேட நீதிமன்றம், 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி நீதியரசராக பதவி வகித்த மொஹான் பீரிஸ் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top