1150 x 80 px

 

தபால் மூல வாக்காளர் சீட்டுகளை விநியோகத்தில் மாற்றம்

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்காளர்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் விநியோகிக்கும் பணிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

தபால் மூலச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணி இன்று (11) முதல் ஆரம்பிக்கப்படவிருந்தது.

இதன்படி வடக்கிலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும் தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கான வாக்குச் சீட்டுக்களை ஜனவரி 12ஆம் திகதி மேற்கொளள்ப்படவுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் தபால் மூல வாக்களிப்பளிப்பிற்கான வாக்குச் சீட்டுக்கள் 13ஆம் திகதி விநியோகிக்கப்படவுள்ளன.

இதேவேளை, கம்பஹா, குருணாகல் மாவட்டங்களில் 2018 ஜனவரி 12ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்த விநியோகப் பணிகள் அவ்வாறே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top