1150 x 80 px

 

கெரில்லாப் போராளியின் 'பல்பசா கபே' நூல் வெளிவந்தது

நேபாளத்தில் கெரில்லா போரின் பின்னணியும், அதில் ஈடுபட்ட ஒரு போராளியின் வாழ்க்கையும், காதலும், கலையும் அடங்கிய கதையின் சிங்கள மொழிப் பெயர்ப்பு நூல் நேற்று (11) வெளியிடப்பட்டது.

நேபாள மொழியில் எழுத்தப்பட்ட இந்த மூல நூலின் ஆங்கில பதிப்பை, சிரேஸ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய சிங்களத்திற்கு மொழிப் பெயர்த்திருந்தார்.

லங்கா நியூஸ் வெப் அனுசரணையில் வெளியிடப்பட்ட இந்த நூல் வெளியீட்டு விழா, கொழும்பிலுள்ள தேசிய நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம், ஜே.வி.பியினரால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் என பல சம்பவங்களை ஒப்பீட்டு ரீதியாக இந்த புத்தக வெளியீட்டில் பேசப்பட்டது.

சிங்கள பிரபல எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும், ஊடகவியலாளர்களும், பொதுமக்களும் என பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இந்த புத்தக வெளியீட்டிற்கு சிரேஸ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப் பிரியவின் சகோதரரும், தேர்தல் ஆணையாளருமான மகிந்த தேசப் பிரியவும் சமூகமளித்திருந்தமை விசேட அம்சமாகும்.

palpasa cafe 1

palpasa cafe 2

palpasa cafe 3

palpasa cafe 4

palpasa cafe 5

palpasa cafe 6

palpasa cafe 7

 

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top