1150 x 80 px

 

ஆட்சிப் பொறுப்பு மக்களுக்கு வழங்கப்படும் : ராஜித்த

ஜனாதிபதியும், பிரதமரும் ஆட்சிப் பொறுப்பை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

உள்ளுராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பேருவளை பிரதேச சபைக்குப் போட்டியிடும் வேட்பாளரின் தேர்தல் பிரசார அலுவலகத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் நேற்று (11) நடைபெற்றது.

இதன்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அமைச்சர்,
''எதிர்க்கட்சியினர் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும், தற்போதைய அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்கிறது. 2020ஆம் ஆண்டில் நாட்டில் பாரிய அபிவிருத்தியை முன்னெடுப்பதே ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் எதிர்பார்ப்பாகும். உள்ளுராட்சித் தேர்தல் நடத்தப்படும் முறை சிறந்ததாகும். முன்னர் இருந்த தேர்தல் முறையில் மோசடியாளர்கள் உருவாகினர். சாதாரண நபருக்கு நாடாளுமன்றம் வர வாய்ப்பு இருக்கவில்லை. விருப்பு வாக்குமுறையில் தேர்தல் நடத்தப்படும் போதே இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. அதிகாரமே இதற்குக் காரணமாகும். அதன்பின்னர் மோசடி ஆரம்பிக்கிறது. அதன்பின்னர் நாடு சீரழிகிறது. இதற்கு எதிராகவே நாம் ஜனவரி 08ஆம் திகதி நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க நேர்ந்தது.'' என்று அமைச்சர் தெரிவித்தார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top