1150 x 80 px

 

ஜனாதிபதி கட்சி பேதமின்றி திருடர்களைப் பகிரங்கப்படுத்துகிறார் : டிலான்

கட்சி பேதமின்றி திருடர்களை, பகிரங்கமாக விமர்ச்சிக்க ஜனாதிபதி பின்நிற்கவில்லை என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

இதனால் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு தற்போது ஆதரவளிப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஹாலிஎல பிரதேசத்தில் நேற்று (11) நடந்த மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, பாரிய குற்றச் செயல்கள் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஆகியவற்றின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சிக் கட்சியினர் மட்டுமன்றி, ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியிலுள்ள திருடர்கள் குறித்தும் தற்போது அம்பலமாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இவற்றைப் பகிரங்கப்படுத்தும் போது ஜனாதிபதி, கட்சி பேதமின்றி செயல்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top