1150 x 80 px

 

மகிந்தவின் பாவங்களை ஏற்றுள்ள பிரதமர்

முன்னாள் ஜனாதிபதியின் பாவங்களுக்கான விலையை தற்போதைய அரசாங்கம் செலுத்த நேரிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு ஹெவலொக் திட்டலின் கேட்போர் கூடத்தில் இன்று (12) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு, மேற்கு கொழும்பு வாரியத்தின் கூட்டத்தில் உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ச பெற்ற கடனை மீளச் செலுத்த முடியாத அரசாங்கம் ஒன்றையே தமக்கு கையளித்துள்ளதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்து கருத்துரைத்த பிரதமர்,
''நாட்டின் பொருளாதாரம் குறித்து தற்போது யாரும் கேள்வி எழுப்புவதில்லை. எனினும், கண்டி முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதே நாட்டில் தற்போதுள்ள பாரிய பிரச்சினையாகும். இந்த வலங்களில் இரண்டு துறைமுகங்கள், இரண்டு விமான நிலையங்கள், தொழில் பேட்டைகள், வணிக வலயங்கள் உள்ளிட்டவை அடங்கும். இவற்றின் கேந்திர நிலையமாக கொழும்பு நகர் விளங்குகிறது. மத்திய நெடுஞ்சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்து, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவே தற்போதைய அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகிறது. எனினும், இவற்றைச் செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெற்ற கடன்கள் பெரும் இடையூறாக இருக்கின்றன. இருந்தாலும் இந்த அரசாங்கம் இந்த அபிவிருத்திகளை செய்யும்'' என்று பிரதமர் தெரிவித்தார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top