1150 x 80 px

 

பிணை முறை மோசடி குறித்து வெளியிட்டமை ஜனாதிபதியின் குற்றமல்ல! – லக்ஷ்மன் யாப்பா

சில விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த எடுத்த தீர்மானமே ஜனாதிபதியை பல்வேறு தரப்பினர் விமர்சிப்பதற்கு பிரதான காரணமாகும் என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று (17) தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கு பிரதான காரணம் ஒரு நபரை இலக்கு வைத்தோ அல்லது கட்சியொன்றை இலக்கு வைத்தோ அல்லவென்றும், இடம்பெற்றுள்ள மோசடியை வெளியில் கொண்டுவருவதற்கே எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இதனால் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதுடன், சுதந்திரக் கட்சியில் உள்ள ஒருவருக்கு எதிராக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தால் அதனை உடனடியாக கூறுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிணை முறி மோசடி தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தும் ஜனாதிபதியின் செயற்பாடு எவ்விதத்திலும் குற்றமல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அந்த விடயம் தொடர்பாகவும் தாம் ஜனாதிபதியாக பதவியேற்றதற்கான காரணத்தையுமே அவர் அறிவித்தார் எனவும் இராஜாங்க அமைச்சர் அபேவர்தன தெரிவித்தார்.

பிணை முறை மோசடி தொடர்பாக வெளிப்படுத்தாது, அதனை மறைத்து வைத்திருந்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இவ்வாறான விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் வந்திருக்காது என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top