1150 x 80 px

 

இயற்கை காரணத்திற்காகவே ஜனாதிபதி அமைச்சரவையைவிட்டு அவசரமாக எழுந்து சென்றார் : ராஜித்த

கடந்த 16ம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கடும் விமர்சனங்களுக்காக கூட்டத்தை விட்டு எழுந்து செல்லவில்லை. இயற்கைக் காரணத்திற்காவே அவர் எழுந்து சென்றுள்ளதாக அமைச்சர் இராஜித்த சேனராத்ன (17) நேற்று தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானக் கூட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், அமைச்சவை கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் ஜனாதிபதி திடீரென எழுந்து சென்றாலும் அந்த இடத்தில் இருந்து கோபத்துடன் எழுந்து செல்லவில்லையென அவர் சுட்டிக்காட்டினார்.

என்றபோதிலும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் ஒருவரை ஒருவர் விமர்சித்து சண்டையிட்டுக்கொள்வது பிழையான விடயம் எனவும், அவர்கள் ஒரு உடன்பாட்டிற்கு வரவேண்டுமென்றும் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள அனைத்து தரப்பினருக்கும் அதனை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மத்தியவங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக ஆணைக்குழுவொன்றை அமைத்ததோடு வெளியான கருத்துக்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு சில மனக் கஷ்டங்கள் இருந்தபோதிலும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரச்சினைக்குள்ளாக்கும் விதமாக அந்த ஆணைக்குழுவை அமைத்ததாக ஜனாதிபதி தொடர்ந்து கூறிவருகிறார் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.

அதுதொடர்பாக மீண்டுமொருமுறை அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார். எனினும் அவ்வாறானதொரு கருத்தொன்று அமைச்சரவைக் கூட்டத்தின் போது முன்வைக்கப்படவில்லையென தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top