1150 x 80 px

 

ரணில் விக்ரமசிங்கவிற்கு அழுத்தங்கள் அதிகரிக்கின்றன

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாரிய தோல்வி ஏற்பட்டுள்ள நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கட்சிக்குள் அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லாட்சியின் தேசிய அரசாங்கமாக தொடர்ந்தும் ஆட்சியை முன்னெடுத்துச் செல்வது ஐக்கிய தேசியக் கட்சிகிக்கு பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதால் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

இதனால் தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகி, தேவையான பெரும்பான்மையை சேர்த்துக் கொண்டு தனியான அரசாங்கமொன்றை அமைப்பதற்கான வியூகங்களை அமைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

இதுகுறித்து தற்போதும் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top