1150 x 80 px

 

அடுத்த நகர்வுகள் குறித்து ஆராய ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் சந்திப்பு

அடுத்த நகர்வுகள் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

அடுத்த 20 மாதங்களுக்கான நகர்வுகள் என்ன என்பது குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு மைத்திரி, ரணில், ஜே.வி.பி தரப்பினர் இணைந்து 51.28 வீதமான வாக்குகளைப் பெற்றிருந்தனர்.

மகிந்த தரப்பினர் 47 வீதமான வாக்குகளைப் பெற்றிருந்தனர்.

இம்முறை 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மகிந்த தரப்பினரின் 44.38 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

எனினும், மைத்திரி, ரணில், ஜே.வி.பி. கூட்டணிக்கு 51.83 வீதமான வாக்குகள் கிடைத்துள்ளன. எனினும், இந்த மூன்று தரப்பினரும் இம்முறை தனித்தனியே தேர்தலில் போட்டியிட்டதால் மகிந்த ராஜபக்ச தரப்பினருக்கு அது அமோக வெற்றியாக மாறியுள்ளது.

இதனால் எதிர்காலத்தில் எவ்வாறு இணைந்து செயல்படுவது என்பது குறித்தும், அடுத்த 20 மாதாங்களுக்கு அரசாங்கத்தை எவ்வாறு கொண்டு நடத்துவது என்பது குறித்தும் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top