1150 x 80 px

 

மூன்று பிரதான கட்சிகளும் ஒரு நபரிடம் தோல்வியடைந்துள்ளனர் : கெஹெலிய

நாட்டிலுள்ள மூன்று பிரதான கட்சிகளும் ஒரு தனி நபரிடம் தோல்வியடைந்த சம்பவம் வரலாற்றில் பதிவாகியுள்ளதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலி முடிவுகளில் இது தெளிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் பிரதான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என அந்தக் கட்சி நம்பியிருந்த போதிலும், அந்த நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

''2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி நல்லாட்சி அரசாங்கத்தைப் பதவியில் மக்கள் பதவியில் அமர்த்தினர். மகிந்த ராஜபக்சவின் 9 ஆண்டு ஆட்சியையும் தற்போதைய அரசாங்கத்தின் மூன்று ஆண்டு ஆட்சியையும் மக்கள் அவதானித்துள்ளனர். இந்த மூன்று வருடங்களில் எதுவும் நடக்கவில்லை என்பதை உணர்ந்த மக்கள் தற்போது இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்'' என்று குறிப்பிட்டார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top