1150 x 80 px

 

தொண்டமான் - மகிந்த கூட்டணியில் நுவரெலியாவில் 11 சபைகளை இ.தொ.கா கூட்டணி ஆட்சி

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா மாநகர சபைத் தவிர ஏனைய 11 உள்ளுராட்சி சபைகளினதும் அதிகாரத்தை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஆட்சியமைக்கப் போவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாவட்டத்தில் நான்கு உள்ளுராட்சி சபைகளில் மட்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது.

இந்த நிலையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து நுவரெலியா மாநகர சபையைத் தவிர்ந்த ஏனைய 11 உள்ளுராட்சி மன்றங்களிலும் ஆட்சியமைக்கப் போவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் அறிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்கவுடன் நேற்று இ.தொ.கா. பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் பேச்சு நடத்தினார். இதன்பின்னர் இருவரும் ஊடகங்களுக்கு இணைந்து ஆட்சியமைப்பது குறித்து அறிவித்தனர்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top