1150 x 80 px

 

2020இலும் மகிந்த தோற்பார் : ராஜித்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2020ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியில் நிச்சயம் தோல்வியைச் சந்திப்பார் என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலே நடந்தது. அரசாங்கத்தை மாற்றும் தேர்தல் அல்ல. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அரசாங்கம் செயல்படும். இதில் மோசடியாளர்கள் தண்டிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். கடந்த மூன்று வருடங்களில் 1.5 பில்லியன் ரூபா அரசாங்கத்திற்கு முதலீடு கிடைத்துள்ளது. கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடனை இந்த அரசாங்கம் இன்னமும் செலுத்துகிறது. 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச போட்டியிட்டால் அவர் மீண்டும் தோல்வியைச் சந்திப்பார். உள்ளுராட்சி சபைத் தேர்தலை ஆராய்ந்தால் இது உறுதியாகின்றது.'' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top