1150 x 80 px

 

தேசிய அரசாங்கமே தேக்கத்திற்கு காரணம் : ஐ.தே.க பின்வரிசை உறுப்பினர்

கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கத்தின் பின்னடைவிற்கு தேசிய அரசாங்கமே காரணம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றன.

இதனால் ஐக்கிய தேசியக் கட்சி தனியான ஒரு அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

கட்சித் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று (13) நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இதனைக் கூறினர்.

ஐக்கிய தேசியக் கட்சி தனித்து அரசாங்கமொன்றை ஸ்தாபித்து நாட்டிற்கு சேவையாற்றுவதுடன் கட்சி உறுப்பினர்களையும் பலப்படுத்த வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top