1150 x 80 px

 

இரு பக்கம் வளையும் தொண்டமான்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரண்டு பக்கமும் இணைந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசியல் செய்ய தீர்மானித்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா மாநகரசபையைத் தவிர்ந்த ஏனைய 11 சபைகளில் நான்கு சபைகளில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதில் மூன்று சபைகளில் ஆட்சியமைக்கும் அதிகாரத்தை தமிழ் முற்போக்குக் கூட்டணி இணைந்து போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது.

சில சபைகளில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிக ஆசனங்கள் கிடைத்திருந்தாலும், பெரும்பான்மை ஆசனங்களைப் பெற முடியாது போயுள்ளது.

இதனால் ஏனைய ஏழு சபைகளிலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்ற தீர்மானித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகிந்த ராஜபக்சவை முன்னிலைப்படுத்தி செயல்பட்டு வந்தாலும், மலையகத்தில் இந்தக் கட்சியின் பிரதான செயற்பாட்டாளராக பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சியான மலையக தேசிய முன்னணியின் தலைவர் ரிஷி செந்தில் தமது தரப்பு வேட்பாளர்களை களமிறக்கியிருந்தார்.

மலையக தேசிய முன்னணியின் இணைந்து போட்டியிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 84 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், தற்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா மாநகர சபையைத் தவிர்த்த 11 சபைகளிலும் ஆட்சியமைக்கத் தீர்மானித்துள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top