1150 x 80 px

 

அரசியலில் மக்களுக்கே முக்கியத்துவம் : பைசர் முஸ்தபா

அரசியலில் மக்களுக்கே முக்கியத்துவம் வழங்க வேண்டுமே தவிர பதவிகளுக்கு அல்ல என உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

புறக்கோட்டை பிரதேசத்தில் இன்று (14) நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தேர்தலுக்கு முன்னர் பலர் மக்களைச் சந்தித்து, பல கதைகளைக் கூறுவர். மக்களின் வாக்குகளைப் பெற்று அமைச்சுப் பதவிகளைப் பெற்ற பின்னர் அந்த மக்களை மறந்துவிடுவர் என்று அமைச்சர் தெரிவித்தார்.

மக்களுக்காக இவர்கள் காலத்தை ஒதுக்குவதில்லை. எனினும், இவ்வாறான அரசியலைத் தான் எதிர்ப்பதாகவும், இன்றைய நாளை மக்களுக்கு தான் ஒதுக்கியதாகவும் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top