அமைதிக்கு இடையூறாக உள்ள மதுபான விற்பனை நிலையத்தை அகற்ற வேண்டும் !

அங்கும்புர பிரதேசத்தில் நடத்திச் செல்லப்படும் மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கும்புர பிரதேச மக்கள் கடந்த (17)ம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


மதுபான விற்பனை நிலையம் காரணமாக தமது பிரதேசத்தின் அமைதிக்கு இடையூறு விளைவிப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர். அத்துடன் அடுத்த வருடத்திற்கான அந்த விற்பனை நிலையத்தின் அனுமதி பத்திரத்தை வழங்க கூடாது என அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.


ஆர்ப்பாட்டத்தின் போது பதாதைகள் ஏந்தியவாறு நகரத்தினுள் பிரவேசித்து தமது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top