லிந்துலை எல்ஜீன் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ஜீன் தோட்டப்பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் முன்னெடுக்கப்படவுள்ள நீர் மின் உற்பத்தி நிலையத்தை (Power House) மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்க கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

 
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ஜீன் தோட்டப்பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் முன்னெடுக்கப்படவுள்ள நீர் மின் உற்பத்தி நிலையத்தை (Power House) மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்க கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 
 
இன்று (20) காலை முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 60 இற்கும் மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தனர்.
 
 
வட்டவளை பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தினால் 64 குடியிருப்பாளர்கள் பாதிக்கப்படும் அச்சம் காரணமாக இந்த போராட்டம் இடம்பெற்றது.
 
 
நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட தண்ணீர் உள்வாங்கும் குழாய்களை புதைப்பதற்காக மண் அகழ்வு செய்யப்படுவதால் இப்பகுதியில் அனர்த்தம் ஏற்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாக இத்தோட்ட தொழிலாளர்கள் கடிதம் மூலம் தோட்ட அதிகாரியின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டு வந்துள்ளனர்.
 
 
இதன் போது இத்திட்டத்தை நிறுத்துவதாக தெரிவித்த தோட்ட அதிகாரி மீண்டும் வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்க தனியார் கம்பனிக்கு இடம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
 
எனவே மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாது இத்திட்டத்தை முன்னெடுக்க இடம் கொடுப்பதாகவும் சில தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
இருந்தும் குடியிருப்பு பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என அதிகாரிகளால் உத்தரவாதம் வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிடுவதாகவும், இல்லாவிட்டால் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபடுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் எச்சரித்தனர்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top