பாதை புணரமைப்பிற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தும் நடவடிக்கை ஸ்தம்பிதம் !

நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பெரட்டாசி தோட்டம்¸ ரஸ்புருக் பிரிவு, பெரட்டாசி பிரிவு, பூச்சிகொட பிரிவு,  பெரட்டாசி தொழிற்சலை பிரிவு,  மேரியல் பிரிவு, அயரி பிரிவு,  எல்பொட வடக்குஇ மேமொழி பிரிவுஇ  காச்சாமலை பிரிவுஇ கட்டகித்துல தோட்டம்இ வெதமுள்ள கெமினிதன் பிரிவு, கந்தலா தோட்டம் போன்ற தோட்டங்களில் சுமார் 8000 க்கு மேற்பட்ட தோட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.  இத்தோட்டங்களில் பெரும்பாலானோர் தோட்ட தொழிளாலர்கள். இவர்கள் வேலை தவிர்ந்த மற்றைய நேரங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த மக்கள் பிரயானிக்கும் பாதை சுமார் 25 கிலோ மீற்றர் தூரம் கொண்டாதாகும். இந்த பாதை கடந்த அரசாங்கத்தின் போது புணர் நிர்மாணம் செய்வதற்காக ஆரபிக்கபட்ட போதும் 04 கிலோ மீற்றர் வரை காபட் பண்ணபட்டு அரசாங்க மாற்றத்தின் பின்னர் கைவிடபட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு மாதத்திற்கு முன்னர் இந்த பாதையின் வேலை திட்டம் ஆரபிக்கபட்ட போதும் தற்போது கைவிடபட்டுள்ளது. இந்த பாதையில் சேவையில் ஈடுபட்டு வந்த .போ. பஸ் போக்கவரத்து பாதை அவலம் காரணமாக 10 வருடமாக நிருத்தபட்டுள்ளது. இப்பிரதேசத்தில் காணப்படும் வைத்தியசாலைக்கு போக்குவரத்து சீர் இன்மை காரணமாக வைத்தியர்கள் வைத்தியசாலைக்கு நியமனம் பெருவதில்லை¸ ஆசிரியர்கள் மிகவும் கஸ்டத்தின் மத்தியில் பாடசாலை சென்று கல்வி கற்பித்து வருகின்றனர். இந்த பாதை நுவரெலியா கண்டி பிரதான பாதையில் டெல்டா கெமுனுபுர பிரதேசத்தில் பெரட்டாசிக்கு பிரிந்து செல்கின்றது.  இந்த பாதைய முன்னால் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு இணை தலைவரும் .தொ.கா வின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கு இனங்க 6 கோடியோ 60 இலட்சம் ரூபா செலவில் 10 கிலோ மீற்றர் செப்பனிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  தற்போது ஒரு கிலோ மீற்றர் பாததை செப்பனிடபட்டுள்ளது.

இந்த பாதை அவலம் காரணமாக தோட்ட மக்கள் மேலும் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். மக்களின் அன்றாட தேவைகள் உட்பட பாடசாலை செல்வதற்கு மாணவர்களும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். மக்களின் மேலதிக அவசர மருத்துவ சிகிச்சைகளுக்காக புஸ்ஸல்லாவ வைத்தியசாலையையே நாட வேண்டியுள்ளது. அதுவும் சிக்கலான காரியம் காரணம் 10 கி.மீ பாதை முற்றாக சேதமடைந்துள்ளது. இப்பாதையில் பஸ் விபத்துக்கள் சுமார் 5 முறை இடம்பெற்றுறுள்ளது. பலர் இறந்தும் பலர்  பாதிக்கப்பட்டும் உள்ளனர். நோயாளர்களையும், குழந்தை பெறுவோரர்களையும் பல மைல் தூரம் லொறியில் கொண்டு செல்வதால்  இடையில் இறந்துள்ளனர். காரணம் பாதையின் அவலம். குழந்தை கிடைக்க லொறியில் கொண்டு சென்ற தாயிற்கு பாதையிலேயே லொறியில் குழந்தை கிடைத்து குழந்தை இறந்த சம்பவமும் இடம் பெற்றுள்ளது. 9 பிரிவினை கொண்ட தோட்டத்தில் அம்புலன்ஸ் வசதி கூட இல்லை. வேறு வைத்தியசாலையிலும் இல்லை. இந் நிலையில் இந்த பாதையை உடடியாக திருத்தி தருமாறு மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்

ROAD DEV 2

ROAD DEV 1

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top