நெரிசலாக உள்ள மத்தளை விமானநிலையம் !

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதையில் மேற்கொள்ளப்படும் புணரமைப்பு காரணமாக மத்தளை சர்வதேச விமான நிலையம் மிகவும் நெரிசலாக உள்ளதாக அதன் முகாமையாளர் உபுல் கலன்சூரிய தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 06ம் திகதி முதல் இதுவரை 84 விமானங்கள் பயணித்துள்ளதாகவும் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவை மட்டுமின்றி மேலதிகமாக ஃபிளை டுபாய் மற்றும் இந்தோனேசியாவின் ஸ்ரீ விஜய விமான சேவை மத்தளையிலிருந்து தங்களது விமான பயணத்தை தொடங்கியுள்ளது.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் 6275 பயணிகள் மத்தளை விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர்.

விமான நிலையம் நெரிசலாக இருந்தாலும் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுப்பதற்கு விமான நிலைய ஊழியர்கள் செயல்பட்டு வருகின்றதாகவும் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

mattala 1

mattala 2

mattala 3

mattala 4

mattala 5

mattala 6

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top