இலங்கையில் ஒன்றிணைந்த மின்சக்தி நிலையம் திறப்பு !

யாழ்ப்பாணம், எழுவை தீவுப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது ஒன்றிணைந்த மின்சக்தி நிலையம் மின்வலு மற்றும் மீள் புத்தாக்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் நேற்று (10) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரண்டு வருடகால ஆட்சி நிறைவினையொட்டி முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இது அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

60 கிலோவோட் மின்சார கொள்ளளவை கொண்ட குறித்த மின்னுற்பத்தி நிலையம் காற்று, சூரிய சக்தி மற்றும் டீசல் எரிபொருளைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் மின்சார சபையின் நிதி ஆதாரத்துடன் பசுமை சக்திவலு விரிவாக்கல் நடவடிக்கையை இலக்கு வைத்து குறித்த மின்னுற்பத்தி நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அந்த கலப்பு மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு 187 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்க சக்திவலு அமைச்சு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top