தெரணியகல இரட்டை கொலைச் சம்பவம் - பிரதான சந்தேக நபர் கைது

தெரணியகள மாகல பகுதியில்  ஏழு வயது சிறுமி ஒருவரும், வயோதிபர் ஒருவரும் கூறிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, தேடப்பட்டுவந்த 19 வயதான பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் ஆறுவயது சிறுமி, வீட்டில் வசித்த வயோதிபர் மற்றும் சிறுமியின் தயார் உள்ளிட்டோர் மீது மேற்கொள்ளப்பட்ட கூறிய ஆயுத தாக்குதல் காரணமாக சிறுமியும் வயோதிபரும் உயிரிழந்தநிலையில்இ சிறுமியின் தயார் தீவிர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த்திருந்ததோடு, தேடிவந்த பிரதான சந்தேகநபரை ஸ்ரீ பாத காட்டுப்பகுதியில் மறைந்திருந்த நிலையில், கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top